இந்தி சினிமாவின் உச்சநட்சத்திரம் அமிதாப்பச்சன். இவர் ’கவுன்பனேகாக்ரோர்பதி’என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கி வருகிறார். கவுன்பனேகாக்ரோர்பதி, பொது அறிவு கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் 12 ஆவதுசீசன்செப்டம்பர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இந்தநிலையில், இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குப்பின் அமிதாப் தெரிவித்தகருத்தும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்றநிகழ்ச்சியில், சமூகஆர்வலர்பேஜாவாடாவில்சனும், நடிகர் சோனியும்கலந்துகொண்டனர். அப்போது, அவர்களிடம்
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி அம்பேத்கரும்,அவரதுதொண்டர்களும் எந்தப் புத்தகத்தைஎரித்தனர்? என்ற கேள்வியைக் கேட்டார் அமிதாப்பச்சன். அவர்களுக்கு,
அ) விஷ்ணு புராணம்
ஆ) பகவத்கீதை
இ)ரிக்வேதம்
ஈ) மனுஸ்மிருதி
எனநான்கு விடைகள்தரப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர்கள் ’மனுஸ்மிருதி’யை தேர்ந்தெடுத்து வெற்றி பெற்றனர்.
இதைத்தொடர்ந்து பேசியஅமிதாப்பச்சன், ”1927ல் அம்பேத்கர், பண்டைய இந்துநூலானமனுஸ்மிருதிசாதியபாகுபாட்டையும், தீண்டாமையையும் சித்தாந்தரீதியாகநியாயப்படுத்துவதாகக் கூறி அதனைக் கண்டித்ததோடு அதன்பிரதிகளையும் எரித்தார்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து அமிதாப் பச்சன்கேட்டகேள்வியும், அதன்பிறகு அவர் பேசியதும் இந்துமதமக்களைப் புண்படுத்துவதுபோல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதைத்தொடர்ந்து மஹாரஷ்டிராவைச் சேர்ந்தபா.ஜ.கவின்சட்டமன்ற உறுப்பினர் அபிமன்யுபவார், இந்து மதஉணவுர்களைப் புண்படுத்தியதாகவும், ஒற்றுமையாய் வாழும்இந்து மற்றும் புத்த மதத்தினரிடையே அமைதியைக் குலைக்கமுயற்சித்ததாகவும்அமிதாப்பச்சன்மற்றும் சோனிதொலைக்காட்சி நிறுவனத்தின் மீதுபோலீசில்புகாரளித்தார். அதனைத்தொடர்ந்து அமிதாப்பச்சன்மீதும், சோனிதொலைக்காட்சி நிறுவனம் மீதும்தற்போது போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.