ADVERTISEMENT

அமிதாப் பச்சன் கோரிக்கை ஏற்பு - தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

07:57 PM Nov 25, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் அமிதாப் பச்சன், 'ப்ராஜக்ட் கே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 'அனுமதி இன்றி சில விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் தனது பெயர் பயன்படுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்றும் கேட்டிருந்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமிதாப் பச்சன் தரப்பில் பேசிய வழக்கறிஞர், "அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடக்கிறது. மேலும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி துணிகள், சுவரொட்டிகள் தயாரிக்கின்றனர். இது சமீப காலமாகவே நடந்து வருகிறது. எனவே, அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதி இன்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை முன் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT