அமிதாப் பச்சனுக்கு அறுவை சிகிச்சை

Amitabh Bachchan undergoes angioplasty in hospital

அமிதாப் பச்சன் தற்போது ரஜினி - த.செ. ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடிக்கிறார். மேலும் நாக் அஷ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் கல்கி 2898 ஏ.டி படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு பட படப்பிடிப்பும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலில் ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ”எப்போதும் நன்றியுடன்” எனப்பதிவிட்டுள்ளார்.

81 வயதுடைய அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் அவர் பூரண குணமடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

amitabh bachchan
இதையும் படியுங்கள்
Subscribe