Advertisment

மது, சிகரெட் பழக்கத்தை கைவிட அமிதாப் பச்சன் ஐடியா

Amitabh Bachchan talks about quitting bad habits

Advertisment

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) வெளியாகவுள்ளது. இதனிடையே இப்படத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது அதிலிருந்து மெல்ல குணமடைந்து வருகிறார்.

இந்த நிலையில் மது மற்றும் சிகிரெட் பழக்கத்தை எப்படி உடனடியாக விட்டு விடுவது என்பது குறித்து அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பது, "மது அல்லது சிகரெட் பழக்கம் அவரவர் தனிப்பட்ட விஷயம் தான். இருப்பினும் அதை விட்டுவிட நினைப்பவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்குகிறேன். அது மிக எளிதான விஷயம்.

மது அருந்திக் கொண்டிருக்கும் போதே அந்த கிளாஸை தூக்கி எறியுங்கள். அதே போன்று தான் சிகரெட்டும். புகைபிடித்து கொண்டிருக்கும் போது பாதியில் அதனை தூக்கிப் போடுங்கள். இதை எந்த அளவிற்கு செய்கிறோமோ, அந்த அளவிற்கு ஒரு பிடிக்காத பழக்கமாக மாறும். ஒரே நேரத்தில் புற்றுநோயை அகற்றுவது போல் இது செயல்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்திய திரையுலகில் முக்கிய நடிகராக பார்க்கப்படும் அமிதாப் பச்சன், உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய கெட்ட பழக்கங்களை கைவிடுவது பற்றி பேசியிருப்பது ரசிகர்களை தாண்டி பலரையும் கவர்ந்துள்ளது.

amitabh bachchan
இதையும் படியுங்கள்
Subscribe