Amitabh Bachchan takes lift from fan on bike to reach shoot

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே ரிபு தாஸ் குப்தா இயக்கத்தில் 'செக்‌ஷன் 84' படத்திலும் நடித்து வருகிறார். இதில் டயானா பென்டி, அபிஷேக் பானர்ஜி மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோர் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

Advertisment

இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லிஃப்ட் கேட்டுச் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார் அமிதாப் பச்சன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு லிஃப்ட் கொடுத்தவரை குறிப்பிட்டு,"நீங்கள் யார் என்று தெரியாது. ஆனால், நீங்கள் கடமையாக எண்ணி சரியான நேரத்தில் என்னை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்துச் சென்றீர்கள்" என நன்றி தெரிவித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Advertisment