இயக்குநர் அவதாரம் எடுக்கும் மோகன்லால்... வாழ்த்திய அமிதாப் பச்சன்!

mohanlal

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், 'பரோஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார். குழந்தைகளுக்கான மாயாஜாலப் படமாக உருவாகவுள்ள இப்படம், முப்பரிமாணதொழில்நுட்பத்தில் எடுக்கப்படவுள்ளது. மோகன்லால், பிரித்விராஜ், பிரதாப், பாஸ் வேகா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்திற்கு, லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இன்று (24.03.2021) காலை பூஜையுடன் தொடங்கின.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="71d5c826-62b4-412f-8ea7-83aedf11920a" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Kadan-article-inside-ad_1.png" />

இந்த நிலையில், இயக்குநராக அறிமுகமாகும் மோகன்லாலுக்கு பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தன்னுடைய முதல் படமாக'பரோஸ்' படத்தை இயக்கும் மோகன்லாலுக்கு வாழ்த்துகள். வெற்றி, செழிப்பு, பெரும் சிறப்பு கிடைக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

mohanlal
இதையும் படியுங்கள்
Subscribe