/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/262_8.jpg)
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத்தொடர்ந்து தனது 170வது படத்திற்கு தயாராகியுள்ளார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கொச்சியில் தொடங்குகிறது. அதற்காக விமானம் மூலம் கேரளா சென்றுள்ளார். த.செ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதுவரை துஷார விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இது பற்றிய தகவல்கள் வந்திருந்தாலும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'ஹம்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார் ரஜினி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)