Skip to main content
Breaking News
Breaking

வீட்டை விற்ற அமிதாப் பச்சன்

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
Amitabh Bachchan has sold his duplex apartmen

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தற்போது தனது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை தற்போது விற்றுள்ளார்.  இந்த வீடு மும்பை ஓஷிவாரா பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ரூ.31 கோடிக்கு அமிதாப் பச்சன் இந்த வீட்டை வாங்கினார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28வது தளத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. மேலும் இந்த குடியிருப்பில் 6 தளத்திற்கு பார்க்கிங் வசதி இருக்கிறது. 

இந்த வீட்டை முதலில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனுக்கு மாதம் ரூ.10 லட்சம் வாடகைக்கு கொடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த வீட்டை தற்போது ரூ.83 கோடிக்கு விற்றுள்ளார். இதற்கான முத்திரைத் தாள் கட்டணம் மட்டும் ரூ.4.98 கோடி என்றும் பதிவு கட்டணம் 30 ஆயிரமும் என கூறப்படுகிறது. அவர் வாங்கியதை விட தற்போது 168 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளதாக தெரிகிறது. 

சார்ந்த செய்திகள்