/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/160_15.jpg)
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக தனக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்து வந்து இப்படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்துள்ளது. அப்போது அடிபட்டதில் வலது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து சோதிக்கப்பட்டது.
பின்பு மருத்துவர்கள் காயம் குணமடையும் வரை ஓய்வு எடுக்க வேண்டி அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தற்போது மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறார். இதனால் படப்பிடிப்பு படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)