Amitabh Bachchan concern for those affected by Mumbai rains

இந்தி திரையுலகில் மூத்த நடிகராக மற்றும் முன்னணி நடிகராக வலம் வரும் அமிதாப் பச்சன், தொடர்ந்து பல்வேறு படங்களில் பணியாற்றி வருகிறர். இப்போது ரஜினியுடன் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் கமல், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடியை கடந்து வசூலித்து வருகிறது.

இதனிடயே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமிதாப் பச்சன், தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது மனைவி ஜெயா பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ஒவ்வொரு நாளும் மழை. வேலை செய்யும் படப்பிடிப்பு தளத்தில் கூட” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக அவரது இணையதளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “வெயில் காலத்துக்குப் பிறகு மழை பெய்வது ஒரு வரம்.. ஆனால் எதிர்பார்த்த விவசாயப் பலன்களைத் தவிர, அது பேரழிவையும் வெள்ளத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிலப்பரப்பைப் பாழாக்குகிறது மற்றும் துன்பப்படுபவர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற நிலை வருகிறது. அதனால் மழையால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது கடினம். ஆனால் அனைவரும் நலம் பெறவும், அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பதிவு தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.