/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/139_40.jpg)
பாலிவுட்டின் சீனியர் நடிகரான அமிதாப் பச்சன், கடைசியாக ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில் செக்ஷன் 84 மற்றும் ‘கல்கி 2898 ஏடி’ பார்ட் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் 2024-2025 நிதியாண்டில் அதிக வரி செலுத்திய பிரபலமாக அமிதாப் பச்சன் மாறியுள்ளார். பெரிய பட்ஜெட் திரைப்படங்கள், பிரபல நிறுவனத்தின் விளம்பர படங்கள், ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சி(தொகுப்பாளர்)என மொத்தம் இந்தாண்டு 350 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இதற்காக அவர் 120 கோடி ரூபாய் வரி செலுத்தியுள்ளார். இதில் கடைசி தவணை அட்வான்ஸாக 52.50 கோடி ரூபாய் கடந்த 15ஆம் தேதி அவர் செலுத்தியதாகக் கூறப்படுகிறது
கடந்த ஆண்டு 79 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி அமிதாப் பச்சன் நான்காவது இடத்தில் இருந்தார். இந்தாண்டுஅவரது வருமான வரி 69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு 92 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி, அதிக வருமான வரி செலுத்திய பிரபலமாக இருந்த ஷாருக்கானை தற்போது அமிதாப் பச்சன் பின்னுக்கு தள்ளியுள்ளார். 82 வயதிலும் அவர் அயராது உழைத்து வருவதை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தாண்டு விஜய் 80 கோடி ரூபாயும் சல்மான் கான் 75 கோடி ரூபாயும் வரியாக செலுத்தியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)