Advertisment

ஒரே காரணத்திற்காக அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா மீது போலீஸ் நடவடிக்கை

Amitabh Bachchan and Anushka Sharma in trouble for not wearing helmet while bike riding

Advertisment

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க பைக் ஓட்டி வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கையில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனை சமூக வலைத்தளத்தில் மும்பை போலீஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதேபோன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அதற்கு மும்பை போலீஸார் பதிலளித்துள்ளனர். இருவரும் ஹெல்மெட் போடாதது தொடர்பாக டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளனர்.

மும்பை போலீசின் இந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டு அவரது வலைப் பதிவில் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே', 'செக்‌ஷன் 84' படத்தில் நடித்து வருகிறார் அமிதாப் பச்சன். அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

MUMBAI POLICE anushka sharma amitab bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe