Amitabh Bachchan about kamal in project k event

அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) பான் இந்தியா படமாகத்தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தில்கமல்ஹாசன் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்த நிலையில், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. படத்தின் இசைப் பணிகளை சந்தோஷ் நாராயணன் கவனிக்கிறார். இந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சர்ப்ரைஸாக பசுபதி வருகிறார். மேலும் கமல் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இடம்பெறவில்லை. படத்திற்கு 'கல்கி 2898 ஏடி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வீடியோ வெளியீடு அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் நடந்துள்ள நிலையில், அதற்காகக் கமல், பிரபாஸ், ராணா உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு இருக்கின்றனர். இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கமல், அமிதாப் பச்சனைப் பற்றிக் கூறும்போது, "நம் படங்களுக்குப் பார்வையாளர்கள் கொண்டு வரும் ஆற்றல் மிகப் பெரியது. நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம், அவர்கள் நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். மேலும், பார்வையாளர்களுடன் அமர்ந்து பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் போன்றவர்களைப் பார்ப்பதும்ஒரு கெளரவம்" என்றார்.

அப்போது வீடியோ கால் மூலம் கலந்துகொண்டு பேசிய அமிதாப் பச்சன், கமல் பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டு, "இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள், எங்கள் அனைவரையும் விட மிகவும் பெரியவர். உஙகள் நடிப்பு இங்க வேண்டாம். கமல் செய்த வேலையை சாதிப்பது மிகவும் கடினம். அவரது ஒவ்வொரு படமும் அவர் எடுக்கும் உண்மை மற்றும் முயற்சியால் நிரம்பியுள்ளது. அவரைப் போலவே அதே படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது" என்றார்.

Advertisment