பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனி ட்விட்டர் அக்கவுண்டை நேற்று இரவு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

amitabh hack

அமிதாப் பச்சன் முதன் முதலாக நேரடி தமிழ் படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் ஷாருக்கானுக்கு அடுத்தபடியாக அதிக ஃபாலோவர்ஸ்களை வைத்திருப்பவர் அமிதாப் பச்சன். சுமார் 37.4 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கிறார். அதேபோல அமிதாப் ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க கூடியவரும்.

இந்நிலையில் நேற்று இரவு துருக்கி நாட்டைச் சேர்ந்த சைபர் டீம் ஒன்று அமிதாப்பின் அக்கவுண்டை ஹேக் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனனர். அதில் பாக். பிரதமர் இம்ரானின் புகைப்படத்தை ப்ரொபைல் படமாகவும், பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக பேசியும் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இது குறித்து மும்பை போலீஸ் அதிகாரி கூறுகையில், சைபர் குழு மற்றும் மகாராஷ்டிரா சைபர் குழு ஆகியவற்றிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த குழு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அமிதாப் பச்சனின் டுவிட்டர் கணக்கு சரிசெய்யப்பட்டுவிடும் என்று அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.