கள்வனின் காதலி படத்தை தொடர்ந்து இயக்குனர் தமிழ்வாணன் அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரை வைத்து இயக்கும் படம் ‘உயர்ந்த மனிதன்’.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமிதான் பச்சன் நடிக்கும் முதல் நேரடி படம் இது. உயர்ந்த மனிதன் படம் தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும், அதற்கு கீழே அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளது.
“சிவாஜி கணேசன் எனும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள், எஸ்.ஜே. சூர்யாவும் நானும். சிவாஜி, தமிழ் சினிமாவின் உச்சபட்ச பழம்பெரும் அடையாளம். அவரது புகைப்படம் இந்த சுவருக்கு அழகு சேர்க்கிறது. அவர் திறமை கொண்டவர். அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். தழ்மையாக பணிந்து வணங்குகிறேன். அவர் மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்” என்றார்.