Advertisment

2100 விவசாயிகளின் கடனை அடைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

பிஹாரைச் சேர்ந்த 2000க்கும் மேலான விவசாயிகளின் கடனை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அடைத்தார்.

Advertisment

amitabh bachan

“என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். பிஹாரைச் சேர்ந்த நிலுவை தொகையை கட்டமுடியாமல் இருந்த 2100 விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களுடைய கடனை ஒரே தவனையாக வங்கியில் செலுத்தப்பட்டுவிட்டது. அந்த விவசாயிகளில் சிலரை ஜானக்கிற்கு அழைத்து ஸ்வேத்தா மற்றும் அபிஷேக்கின் கைகளால் பணத்தை கொடுத்துள்ளோம்” என்று அமிதாப் தன்னுடைய பிளாக்கில் எழுதியுள்ளார்.

Advertisment

அமிதாப் பச்சன் விவசாயிகளின் கடனை செலுத்துவது இதுதான் முதல் முறை அல்ல, கடந்த வருடமே ஆயிரத்திற்கும் மேலான உத்தரப் பிரதேச விவசாயிகளின் கடனை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 76 வயதாகும் அமிதாப் அடுத்து பிஹாரைச் சேர்ந்த விவசாயிகளின் கடனை செலுத்துவதாக வாக்குறுதி முன்னமே கொடுத்திருந்தார். அதை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

“புல்வாமா தாக்குதலில் தேசத்திற்காக தங்களுடைய உயிரை பறிகொடுத்த இந்திய படை வீரர்களின் குடும்பங்களுக்கு என்னால் இயன்ற சிறிய நிதி உதவி செய்வதுதான் என்னுடைய அடுத்த கடமை” என்றும் அந்த பிளாக்கில் தெரிவித்துள்ளார்.

amitab bachan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe