பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் இரத்தத்தில் ‘ஹெப்பாடிடீஸ் பி’ இருப்பது கடந்த 1982ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட விபத்தின்போது நடந்த சிகிச்சையில் கண்டறியப்பட்டது. இதன்பின் அவரது கல்லீரல் 75 சதவீதம் செயல் இழந்தது. அப்போதிலிருந்து கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் அமிதாப். அவ்வப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. ஆனாலும், அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது, டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, தினசரி ட்வீட், ப்ளாக் எழுதுவது என்று சுறுசுறுப்புடன் இயங்கி வந்தார்.

amitab bachan

Advertisment

Advertisment

இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல்நலக்குறைவு எற்பட்டதால் முமபியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக தனி அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அமிதாப் பச்சனின் உடல் சீராக இருப்பதாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருடைய ரசிகர்கள் பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.