style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
செக்கச்சிவந்த வானம் படத்தையடுத்து மணிரத்னம் அடுத்ததாக மீண்டும் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த முறை பட்ஜெட் பிரச்சினையால் கைவிடப்பட்ட இப்படத்தை தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டாவை வைத்து மறுபடியும் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்ற புதிய தகவலும் தற்போது கசிந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.