amitab bachan

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அமிதாப்பும் அவரது மகன் அபிஷேக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் இந்திய அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள் மற்றும் பலர் அமிதாப்பச்சனின் குடும்பத்தினர் பூரண நலம்பெற வாழ்த்துத் தெரிவித்தார்கள்

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், “எனக்கும், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யாவுக்கும் பிரார்த்தனைகளை, தங்கள் கவலைகளைத் தெரிவித்த அனைவருக்கும் அளவற்ற அன்பும் நன்றியும். எங்கள் மீது அக்கறை காட்டும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதில் சொல்வது எனக்குச் சாத்தியப்படாது. அதனால் நான் என் கைகளைக் கூப்பி வணங்கி, உங்கள் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.