amitab bachan

இந்தியா முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாலிவுட்நட்சத்திரங்களின் வீடுகளில்பணிபுரிபவர்கள்கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நிறைய பாலிவுட் நட்சத்திரங்களே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் இத்துயரிலிருந்து விரைவில் அமிதாப்பின் குடும்பம் மீண்டு வரவேண்டும் என்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை மிகவும் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் அமிதாப் பச்சன். அதில், "சந்தேகமின்றி மருத்துவர்கள் கடவுள்கள்.‌ தூய வெள்ளை உடை, உன்னதமான சேவை மனப்பான்மை, அவதிப்படுபவர்களை அரவணைத்துக் கொள்ளும் திறன், கனிவும் கருணையும் கொண்டவர்கள், மனிதத் தன்மையை உயர்த்திப் பிடிப்பவர்கள் அவர்கள்தான்" என்று கூறியுள்ளார்.