பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அபிஷேக் பச்சனை தவிர சுவேதா என்று மகளும் உள்ளார். இவர் தொழிலதிபர் நிகில் நந்தாவை திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் பலவருடங்களாக பயணித்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய பிரபலமான அமிதாப் பச்சனின் சொத்துகள் ரூ. 2,800 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை கோடி மதிப்பிலான சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதாக அமிதாப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amitabh-bachan_1.jpg)
சமீபத்தில் அமிதாப் பச்சன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் உங்களுடைய விருப்பம் என்ன என்று கேட்டபோது, அதற்கு அவர் என்னுடைய சொத்துகளை எனது மகனுக்கு மட்டும் கொடுக்க முடியாது. என்னுடைய மகளுக்கும் சமமாக பிரித்துகொடுப்பதுதான் என்று கூறினார்.
ஏற்கனவே ஒரு தடவை தனது வலைத்தள பக்கத்தில், ‘நான் இறக்கும்போது, எனது சொத்துகளை மகன், மகளுக்கு சமமாக விட்டு செல்வேன்’ என்று கூறியிருந்தார்.
பெண் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.சபை தூதராகவும் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)