Published on 21/08/2020 | Edited on 21/08/2020

கடந்த ஜூலை மாதம் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஒவ்வொருவராக குணமடைந்து வீடு திரும்பினர். அதேபோல, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதியன்று அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் பிரபலமான 'க்ரோர்பதி' நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாக அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார். அதில், “கே.பி.சி. நிகழ்ச்சி மற்றும் ப்ரோமோ படப்பிடிப்புக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லை. இந்தத் தொற்று காலத்தில் நாம் நம்மை எப்படி வழிநடத்திக் கொள்கிறோம் என்பதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.