Skip to main content

"பல வருடங்களுக்கு முன் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது" -எஸ்.பி.பி குறித்து அமிதாப் உருக்கம்...

Published on 28/09/2020 | Edited on 28/09/2020
amitab bachan

 

 

பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி திடீரென சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி காலமானார். 

 

தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது பிளாகில் பதிவிட்டுள்ளார். அதில், “வேலைப்பளுவின் நடுவே நம்மை விட்டு புறப்பட்டு விட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை நினைத்து மனம் அலைபாய்கிறது. கடவுள் பரிசளித்த அந்த குரல் அமைதியாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல விசேஷமானவர்கள் நம்மை விட்டு வானுலகம் சென்று விடுகிறார்கள்.

 

இந்த கரோனா இன்னொரு நல்ல மனிதரை கொண்டு சென்றுவிட்டது. தெய்வீகம் மற்றும் ஆன்மாவின் குரல். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகப் பிரபலமானவராக இருந்தாலும் எளிமையும், பண்பும் கொண்ட மனிதர் அவர்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அயோத்தி கோயில் திறப்புக்கு 7 ஆயிரம் பிரபலங்களுக்கு அழைப்பு! 

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

7 thousand celebrities are invited for the opening of the Ayodhya temple!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிக பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மத தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசை கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மத தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Next Story

"கைதாகிவிட்டேன்" - ஷாக் கொடுத்த அமிதாப்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Amitabh Bachchan post viral

 

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என போக்குவரத்துக்கு நெரிசலை தவிர்க்க பைக் ஓட்டி வந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அந்த நபருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்க்கையில் இருவரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. இதனை சமூக வலைத்தளத்தில் மும்பை போலீஸ் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதேபோன்று நடிகை அனுஷ்கா ஷர்மாவும் ஒருவருடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பயணித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் தற்போது அதற்கு மும்பை போலீஸார் பதிலளித்துள்ளனர். இருவரும் ஹெல்மெட் போடாதது தொடர்பாக டிராபிக் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.  

 

மும்பை போலீசின் இந்த பதிவிற்கு மன்னிப்பு கேட்டு அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார் அமிதாப் பச்சன். மேலும் அது படப்பிடிப்பு தளத்தில் எடுத்தது எனக் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸ் ஜீப்பின் அருகில் வருத்தமாக தலை குனிந்தபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், கைதாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் உண்மையிலே கைதாகிவிட்டாரா அல்லது படத்தின் ப்ரோமோஷனா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

 

அமிதாப் பச்சன் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'ப்ராஜெக்ட் கே', 'செக்‌ஷன் 84' படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்கா சர்மா 'சக்தா எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து வருகிறார்.