Skip to main content

முதல் முறையாக தமிழில் பேசிய அமிதாப்பச்சன், அமிர்கான்...! வீடியோ உள்ளே 

Published on 26/09/2018 | Edited on 26/09/2018
aamir khan

 

 

 

ஹிந்தியில் அமிதாப்பச்சன், அமிர்கான் இணைந்து நடித்துள்ள 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் இருவரும் இதை அறிவிக்கும் விதமாக தமிழிலும், தெலுங்கிலும் பேசிய ப்ரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த வீடியோவில் இப்படம் இரு மொழிகளிலும் டப் செய்து வெளியாகவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு பாலிவுட் படங்களிலேயே அதிக அளவு தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காத்ரினா கைப் மற்றும் 'டங்கல்' பாத்திமா சனா ஷேக் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை விஜய கிருஷ்ண ஆச்சாரியா இயக்கியுள்ளார். 

வீடியோவிற்கு கீழே கிளிக் செய்யவும் 

 

 

 

சார்ந்த செய்திகள்