Skip to main content

“என் அம்மாவிற்காக வேண்டிக்கொள்ளுங்கள்”- அமீர்கான்!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

amirkhan


உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து திடீரென பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இந்த வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸடாரான அமீர்கான் வீட்டில் பணிபுரியும் ஒருவருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமீர்கானுக்கும் கரோனாவா என்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரப்ப தொடங்கிவிட்டனர்.

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமீர்கான். அதில், “என்னுடைய பணியாளர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இதனை அடுத்து பணியாளார் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பி.எம்.சி.-க்கு (பிரிஹான் மும்பை கார்பரேஷன்) நன்றி தெரிவித்துகொள்கிறேன்.

 

மீதமுள்ளவர்கள் அனைவருக்கும் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, ரிஸல்ட் நெகட்டிவ் என்று வந்துவிட்டது.

 

தற்போதுதான் எனது அம்மாவுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அந்த லூப்பில் கடைசி ஆள் அவர்தான். அவருக்கு நெகட்டிவ் வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். கோகிலாபென் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மற்றும் செவிலியர்களுக்கு மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதிச்சுற்றில் தோல்வி - மல்யுத்த வீராங்கனை தற்கொலை?

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

rithika

 

இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த குடும்பம் மகாவீர் சிங் போகாட்டின் குடும்பம். மல்யுத்த வீரரான இவர், தனது பெண்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக உருவாக்கியவர். அமிர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம், மகாவீர் சிங் போகாட் மற்றும் அவரது பெண்களின் நிஜக்கதையை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மகாவீர் சிங் போகாட்டின் மகள்கள் கீதா, பபிதா ஆகியோர் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள். இவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியான ரித்திகா போகாட், மகாவீர் சிங் போகாட்டிடம் மல்யுத்த பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்துள்ளார். மார்ச் 14ஆம் தேதி நடந்த ஒரு மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றில், ஒரு புள்ளியில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட வேதனையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

 

ரித்திகாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் விஜய் குமார் சிங், “சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த இடத்திலிருந்து உலகம் தற்போது மாறிவிட்டது. விளையாட்டு வீரர்கள் முன்பு இல்லாத அளவுக்கு அழுத்தங்களை இப்போது எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தங்களை சமாளிப்பது அவர்களின் பயிற்சியில் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

படம் ரிலீஸ் வரை ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்! - அமீர் அதிரடி முடிவு!

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

vfasfas

 

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்குப் பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று உருவாக்கப்பட்ட இந்தப் படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு, கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இதில் அமீர்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் ஷாரூக் கானும், சல்மான் கானும் கவுரவ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

fasfsa

 

சென்ற வருடமே இப்படம் வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பின்னர் தளர்வுகளுக்குப் பின் மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகும் வரை மொபைல் ஃபோன் பயன்படுத்தப் போவதில்லை என்று அமீர்கான் முடிவெடுத்துள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. வேலை நேரத்தில் மொபைல் அழைப்புகள் அவருக்குத் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக அமீர்கான் தான் நடிக்கும் கதாபாத்திரமாகவே படப்பிடிப்பு முடியும் வரை இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.