amir khan

Advertisment

‘தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’. இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்ப்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று உருவாக்கப்பட்ட இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டு கடந்த ஒரு வருடமாக ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்த வருடம், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் லால் சிங் சட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவருடைய கடந்த வருட பிறந்தநாளன்று வெளியிட்டார் அமீர்கான். இப்படத்தில் அமீருடன் பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். அந்த வகையில்விஜய் சேதுபதியும், அமீருடன் இணைந்து இப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கரோனா அச்சுறுத்தலால் மூன்று மாத ஷூட்டிங் தடைப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் சமயத்திலேயே அமீர்கான் தனது படத்தின் ஷூட்டிங்கை துருக்கியில் நடத்த திட்டமிட்டு, தொடங்கினார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஷாரூக் கான் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடித்து கொடுத்துவிட்டு அதன் பின்னர்தான் துபாய்க்கு ஐபிஎல் போட்டிகளை பார்க்க சென்றதாக சொல்லப்பட்டது. அமீர்கான் மற்றும் ஷாரூக் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்று கடந்த வாரம் சமூகவலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், சல்மான்கானும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக புதிதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விரைவில் இந்த இரண்டு தகவல்கள் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.