/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/112_46.jpg)
இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அடுத்து வெளியான போஸ்டரில், 'இது தமிழகம் அல்ல... தமிழ்நாடு' எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் போஸ்டரில் மாநாடு கூட்டம் நடப்பது போலவும் அதற்காக மறைந்த தலைவர்கள் கலைஞர், மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பேனர்கள் இருக்க நடுவில் அமீரின் பேனர் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அமீர் கைதாவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும் நிலையில் அவர் பேசும், பணம், பதவி, பவரு... இந்த மூணெழுத்தையும் அனுபவிச்சது மாதிரி ஜெயில் என்ற மூணு எழுத்தையும் அனுபவிச்சா தான முழு அரசியல்வாதியாவமுடியும்” வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் பேசும், “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” என்று இடம் பெறும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)