சிவகங்கை, காரைக்குடியில் இயக்குநர் கரு.பழனியப்பன் தலைமையில் மத நல்லிணக்க மீலாது விழா நடந்தது. இதில் பல்வேறு மதத்தினை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இயக்குநர் அமீரும் கலந்து கொண்டார். 

Advertisment

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழி நடத்தினால் என்ன தவறு என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுகவை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது. எம்.ஜி.ஆர், ஆர்.எஸ்.எஸிற்கு எதிராக பொதுவெளியில் தெள்ளத்தெளிவாக பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் எந்த பயனும் கிடையாது, அவர்கள் சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள், மத நல்லிணக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடியவர்கள், என பேசியிருக்கிறார். 

இப்படி சொன்னவரின் கட்சியில் இருந்து கொண்டு எல்.முருகன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருப்பவர்களை நினைத்து வருத்தமாக இருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் ஒரு கண்டனமாவது தெரிவித்திருக்க வேண்டும். அப்படி அவர்கள் சொல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது” என்றார்.