/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ameer_18.jpg)
கடந்த 2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஆதிபகவன்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. படத்தை இயக்குவதில் கவனம் செலுத்திவந்த அவர், ‘யோகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அறிமுகமானார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின்நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இந்நிலையில் அமீர் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இது குறித்து அமீர் வெளியிட்ட தகவலில், "எனது அடுத்த பயணம் தொடங்குகிறது. திரைப்படமென்பது ஒருவரின் தனிப்பட்ட பார்வைதான். அது அழகாக மாறுவதென்பது, இன்னொருவருடன் கைக்கோர்க்கும் போதுதான். அது இன்று (02.02.2022) நடைபெறுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)