“ரஜினி, விஜய் யாராவது  கேட்டார்களா” - அமீர் கேள்வி

ameer argument with reporters regards jafer sadiq issue in uyir tamizhuku press meet

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அமீர், கரு.பழனியப்பன், ஆதம்பாவா, பொண்வண்ணண் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமீரிடம், “பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்கப்பட்டது. இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா ? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.. ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ?

அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது கேட்டார்களா ? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள் ? சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா ?” என்றார்.

ameer
இதையும் படியுங்கள்
Subscribe