Advertisment

புதிய படத்திற்காக மீண்டும் இணையும் அமீர் - யுவன் கூட்டணி

Ameer and Yuvan team up again for a new film

Advertisment

'மௌனம் பேசியதே' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அமீர், அடுத்ததாக ராம், பருத்தி வீரன், ஆதி பகவான்உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்திய அமீர் 'யோகி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து அதனைத்தயாரித்தும் இருந்தார். பின்பு யுத்தம் செய், வட சென்னை, மாறன்உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது 'உயிர் தமிழுக்கு' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இதையடுத்து 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார். இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் என் போஸ்டர் வெளியானது.

அமீர் இயக்கும் அனைத்து படங்களிலும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பாளராக பணியாற்றிய நிலையில் மீண்டும் ஒரு படத்திற்கு இருவரும் கைகோர்க்கவுள்ளனர். இப்படத்தையுவன் ஷங்கர் ராஜா மற்றும் அமீரும் இணைந்து வெளியிட உள்ளனர். இதில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.படத்தலைப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைகள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

yuvan shankar raja ameer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe