வாடிவாசல் ரகசியம் - போட்டுடைத்த வெற்றிமாறன்

ameer to act in vaadivaasal

அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து தயாரித்து வெற்றிமாறன் வழங்கும் படம் 'மாயவலை'. ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தில் சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் 'தயா' செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் பாடல்களுக்கு சினேகன் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது படம் குறித்தும் அமீர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்த வெற்றிமாறன், சூர்யாவை வைத்து அவர் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் அமீர் நடிக்கவுள்ளதாக சொன்னார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "வாடிவாசல் படத்தில் அமீர் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார். வட சென்னையில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த போது, நான் அவருக்கு சில விஷயங்களை கொடுக்க வேண்டும் என தோணுச்சு. ஆனால் வாடிவாசல் படத்தில், அவர் இருந்தால் எனக்கு நிறைய விஷயங்களை கொடுப்பார் என் நினைச்சேன். அதற்காக சவுகரியத்திற்காக கேட்டேன். உடனே அவர் ஒப்புக்கொண்டார்" என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கமிட்டாகியுள்ள 'வாடிவாசல்' படம், ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

ameer vaadivaasal
இதையும் படியுங்கள்
Subscribe