இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம் புரொடைக்ஷன்’ தயாரிப்பில் கெத்து தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தண்டகாரண்யம்’.இப்படத்தில் ரித்விகா, ஷபீர், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ‘குண்டு’ பட இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் பழங்குடியின மக்களை அரசாங்கம் எப்படி கையாள்கிறது என்பதைப் பற்றி பேசுகிறது.
படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதில் கலையரசன் - வின்சு சாமின் காதல், மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை, ராணுவப் படைகளின் தேடுதல் வேட்டை உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தது. பின்பு ‘காவக் காடே’ பாடல் வெளியாகியிருந்தது. இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுனர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டெலிவரி செய்யும் பேகில் கூட படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு விளம்பர பணிகளை மேற்கொண்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/13/290-2025-09-13-19-16-48.jpg)
இந்த நிலையில் படத்தின் ஸ்பெஷல் ஷோ நடந்துள்ளது. இதில் இயக்குநர்கள் அமீர், சேரன் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் முத்தரசன், திருமாவளவன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். பார்த்தவர்கள் அனைவரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அமீர், “இந்த நாட்டில் பழங்குடியின மக்கள் தனது சொந்த வாழ்விடங்களை விட்டு அகதிகளாக ஆக்கப்படும்போது மன்னுக்காக போராடினார்கள். சமூக பொறுப்பில்லாதவர்களால் இதை சொல்லவே முடியாது. அப்படி ஒரு பொறுப்புள்ள இயக்குநராக அதியன் ஆதிரை இருக்கிறார். இந்த படம் என் மனதை விட்டு போறதுக்கு இரண்டு நாள் ஆகும்” என்றார்.
Follow Us