அறிமுக இயக்குநர் சாம் இயக்கத்தில்  மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோலோ’. இதில் தேவ், தேவிகா சதீஷ், ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையொட்டி இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சமுத்திரக்கனி, அமீர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இப்பட இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

நிகழ்வில் அமீர் பேசுகையில் சமுத்திரக்கனி குறித்து கலகலப்பாக பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “வட சென்னை படத்தில் நான் நடிக்க போனபோது, என்னை வச்சு செஞ்சாங்க. பட ஷூட்டிங் ஏற்கனவே ஆரம்பிச்சாச்சு, ஆனால் நான் பாதியிலதான் போனேன். அதுவும் சம்பந்தம் இல்லாம 80ஸில் இருக்கும் காஸ்டியூம். அதோட போய் உக்காந்தா... வாங்கண்ணே வாங்கண்ணே இப்படி உக்காருங்க, வந்து நம்ம சங்கத்துல சேருங்கன்னு கலாய்குறாங்க. என்னை சுத்தி கிஷோர், தீனா, பவன் என பெரிய பெரிய ஆளா இருக்காங்க. எல்லாருமே நடிப்புல மிரட்டுறாங்க. சமுத்திரக்கனி ஒரு ஆர்ட்டிஸ்டா நல்ல எக்ஸ்பெர்ட் ஆகிட்டார். டேக் போறதுக்கு முன்னாடி பேசிக்கிட்டே இருப்பார். ஆனால் டேக் போனதுக்கப்புறம் கேரக்டராவே மாறிடுவார். 

டேக்கில் நான் டயலாக் மறந்தாலும் என் டயலாக்கை எடுத்து கொடுப்பார். நான் முதல் நாள் போனதும், இவரும் ஆர்ட் டைரக்டர் ஜாக்கியும் சேர்ந்து, ‘என்ன ஒரு மூணு நாள் தாங்குமா, அதுக்கப்புறம் வேறொரு ஆர்டிஸ்ட தேடனும்’ என்னை பார்த்து கமெண்ட் அடிச்சாங்க. ஏன்னா எனக்கும் வெற்றிக்கும் முட்டிக்கும்னு நினைச்சுருக்காங்க. அப்புறம் நாளு நாள் போனதும் என்ன வண்டி நல்லா போறது மாதிரி தெரியுதுன்னு கமெண்ட் அடிச்சாங்க. ஆனால் சமுத்திரக்கனி வளர்ச்சியை நான் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். எங்கிருந்து வந்து எங்கேயோ போய் இப்போ நம்மள இப்படி போட்டு கலாய்க்குறாருன்னு யோசிப்பேன்” என்றார்.