Advertisment

"கொஞ்சம் சுயமரியாதையோடு வாழ ஆசைப்படுகிறேன்" - அமீர்

ameer about karthi 25 event

வெற்றிமாறன் மற்றும் அமீர் ஆகியோர் இணைந்து வழங்கும் படம் 'மாயவலை'. இப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்க வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர். அதில் அமீர், வெற்றிமாறன், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்தனர். அமீரிடம் கார்த்தியை அறிமுகம் செய்த நீங்கள், கார்த்தி 25 நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அமீர், "சூர்யா குடும்பத்தினருடன் நான் இருந்த நட்பு பல பேருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. திரைத்துறையிலே அண்ணனையும் தம்பியையும் டைரக்ட் பண்ண ஒரே இயக்குநர் நான் தான். சூர்யாவுக்கு மௌனம் பேசியதே. கார்த்திக்கு பருத்திவீரன். அதன் பிறகு அவுங்களுக்கு எனக்கும் நிறைய கேப் விழுந்திருச்சு. நான் ஒதுங்கிட்டேன்" என்றார்.

Advertisment

மேலும், "நான் கொஞ்சம் கோவக்காரன். கொஞ்சம் சுயமரியாதையோடு வாழவேண்டும் என ஆசைப்படுபவன். நான் யாரையும் எதுக்குமே குறை சொன்னது கிடையாது. என்னைநானே குறை சொல்லிக்குவேன். எமோஷனல் ஆனால் டக்குன்னு என்ன தோணுதோ உடனே சொல்லிட்டு வந்துவிடுவேன். சினிமாவிற்காக எதுவும் செய்யமாட்டேன். ஒன்றாக படியேறி மேலே போகும்போது, ஒருத்தர் விட்டு ஒருத்தர் ஒரு சின்ன மனக்கசப்பு வருது. சமூகத்தில் மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்களோ அது போலவே கூட இருக்கிறவங்க பார்க்க வேண்டும் என நினைக்கிறாங்க. என்னால் அது முடியும். மற்றபடி எந்த கோவமும் கிடையாது" என்றார்.

actor karthi ameer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe