Skip to main content

தமிழின் முதல் வெப் சீரிஸின் டீசர் வெளியீடு....

Published on 01/12/2018 | Edited on 02/12/2018

பேட்ட படத்தில் ரஜினி, விஜய் சேதுபதி மற்றும் சசி குமாருடன் நடித்திருக்கும் பாபி சிம்ஹா, தற்போது விடுதலை புலிகளின் தலைவன் கேப்டன் பிரபாகரனின் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். 

 

மேலும் இவர் தமிழில் முதன் முதலாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கும் ’வெள்ள ராஜா’ என்னும் வெப் சீரிஸிலும் நடித்து வந்தார். இந்த வெப் சீரிஸை தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டீரீம் வாரியர்ஸ் தயாரித்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் டிசம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. தற்போது இந்த வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. பாபி சிம்ஹாவுடன் காளிவெங்கட், காயத்திரி, பார்வதி நாயர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்