Advertisment

அமேசானில் என்னென்ன படங்கள் ரிலீஸாகப்போகிறது தெரியுமா?

prime video

தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படங்கள் அனைத்தும் அடுத்து திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருக்காமல் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.

Advertisment

அந்த வகையில் தமிழில் முதல் படமாக ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின் தயாரிப்பாளர்களுக்கும் திரயரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை உண்டானது. இதன்பின் இரு தரப்பினர்களுக்குள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதுதான் சரியான நேரம், குறைந்த அளவிலானபட்ஜெட் படங்களுக்கு ஓ.டி.டி.தான் சரியான தீர்வு என்று ஆணித்தரமாகக் கூறினார்கள்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் படம் மட்டும் வெளியாகவில்லை, மேலும் சில படங்கள் வெளியிட திட்டம் இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதே நிலைதான் மற்ற மொழி சினிமா துறைகளிலும். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்', ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது அமேசன். அதேபோல மற்ற மொழிகளிலும் என்னென்ன படங்கள் வெளியிட இருக்கின்றன என்பது குறித்தும் அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி,

பொன்மகள் வந்தாள் (தமிழ்) - மே 29

குலாபோ சிதாபோ (இந்தி) - ஜூன் 12

பெண்குயின் (தமிழ்) - ஜூன் 19

லா (கன்னடம்) - ஜூன் 26

ப்ரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) - ஜூலை 24

ஆகிய படங்கள் அமேசானில் வெளியாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe