ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் அந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. அந்தாலஜி என்றால் ஒரு திரைப்படத்தில் நான்கு கதைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் உள்ளடக்கியது. அந்த ஒவொரு கதையையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீள படமாக வெளியிடுவது அந்தாலஜி ஆகும்.
தமிழ் திரையுலகிலும் அந்தாலஜி படங்கள் அவ்வப்போது வந்தது. அதில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் சில்லுக்கருப்பட்டி ஆனால், இந்த படத்தை ஒரே இயக்குனர்தான் இயக்கினார்.
இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு ஐந்து பிரபலங்கள் ஐந்து வெவ்வேறு விதமாக கதைகளை உள்ளடக்கி படமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
5 of your favorite storytellers bring you 5 heartwarming stories!#PuthamPudhuKaalai, October 16.@menongautham @Sudhakongara_of @DirRajivMenon @hasinimani @karthiksubbaraj pic.twitter.com/mb4vfQJKpr
புத்தம் புது காலை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்குகின்றனர். இதில் சுஹாசினி மணிரத்னம் முதன்முறையாக இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், அவரவர் பகுதியின் தலைப்பு உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையுமே வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். இந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகுவதாக அறிவித்துள்ளது.