Skip to main content

ஐந்து பிரபல இயக்குனர்கள் உருவாக்கியுள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

Published on 30/09/2020 | Edited on 30/09/2020
prime video

 

 

ஓடிடி பிளாட்ஃபார்ம்கள் வளர்ச்சியடைந்த பின்னர் அந்தாலஜி திரைப்படங்களில் வருகை அதிகரித்துள்ளது. அந்தாலஜி என்றால் ஒரு திரைப்படத்தில் நான்கு கதைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கதைகள் உள்ளடக்கியது. அந்த ஒவொரு கதையையும் வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கி ஒரு முழு நீள படமாக வெளியிடுவது அந்தாலஜி ஆகும்.

 

தமிழ் திரையுலகிலும் அந்தாலஜி படங்கள் அவ்வப்போது வந்தது. அதில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய படம் என்றால் சில்லுக்கருப்பட்டி ஆனால், இந்த படத்தை ஒரே இயக்குனர்தான் இயக்கினார். 

 

இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு ஐந்து பிரபலங்கள் ஐந்து வெவ்வேறு விதமாக கதைகளை உள்ளடக்கி படமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

புத்தம் புது காலை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்குகின்றனர். இதில் சுஹாசினி மணிரத்னம் முதன்முறையாக இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள், அவரவர் பகுதியின் தலைப்பு உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையுமே வெளியிட்டுள்ளது அமேசான் நிறுவனம். இந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகுவதாக அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டணத்தை உயர்த்திய அமேசான் பிரைம்!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

prime video

 

அமெரிக்க ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃப்ளிக்ஸ் தனது கட்டணங்களை அதிரடியாக குறைத்த நிலையில், அமேசான் பிரைம் தனது கட்டணங்களை 50 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, அமேசான் பிரைமிற்கான மாதாந்திர கட்டணம் 129 ரூபாயிலிருந்து 179 ஆக அதிகரித்துள்ளது.

 

அதேபோல் வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப்பிற்கான கட்டணம் 999-லிருந்து 1,499 ஆக உயர்ந்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமேசான் பிரைம் கட்டணம் முதல்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

Next Story

நேரடி ஓ.டி.டி. ரிலீஸை மறுக்கும் தெலுங்கு திரைத்துறை!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

prime video


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்படத் துறை முடங்கியுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகளுக்கும், சின்னத்திரையில் உள்ளரங்கு ஷூட்டிங்கிற்கும் அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதுபோல கேரள மற்றும் தெலங்கானா அரசும் அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு கீழ் அனுமதி வழங்கியுள்ளது.
 


இதனிடையே கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் இதனால் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் போன்ற பொழுதுபோக்கு இடங்கள் பல நாடுகளில் மூடப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பு குறைந்து, நாட்டின் நிலை சீராகும் வரை இதுபோன்ற பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்படாது என்பதால் இந்தியாவில் நேரடி ஓ.டி.டி. ரிலீஸ் செய்து வருகின்றனர் பல தயாரிப்பாளர்கள். இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

அந்த வகையில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த சில படங்களை நேரடி ஓ.டி.டி. ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்களே பல திரையரங்குகள் வைத்திருப்பதால் முதலில் திரையரங்கில் படங்கள் ரிலீஸான பின்னரே ஓ.டி.டி.யில் படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு தெரிவித்துள்ளார்.