ADVERTISEMENT

"அற்புதமான க்ரைம் த்ரில்லர்" - தனுஷ் பாராட்டு

02:45 PM Jun 18, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ‘விக்ரம் வேதா’ இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி எழுதி, தயாரித்துள்ள சீரிஸ் 'சுழல்'. பிரம்மா மற்றும் அருண்சரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்த சீரிஸில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முதல் சீசனான 'சுழல்: தி வோர்டெக்ஸ்', நேற்று (17.06.2022) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் சீரிஸை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷ், 'சுழல்: தி வோர்டெக்ஸ்' வெப் சீரிஸை பார்த்து தன் கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "அற்புதமான க்ரைம் த்ரில்லர். 'சுழல்', உங்களை நிச்சயம் கவரும். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்" என குறிப்பிட்டு புஷ்கர், காயத்ரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT