Advertisment

அமரன் அப்டேட் கொடுத்த சாய் பல்லவி

amaran update by sai pallavi

‘அயலான்’ திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘அமரன்’. இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையைத் தழுவி உருவாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மேஜர் முகுந்த் வரதராஜன், சிப்பாய் விக்ரம் சிங் உள்ளிட்ட பல இராணுவ வீரர்கள், காஷ்மீரிலுள்ள சோபியான் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேஜர் முகுந்த் வரதராஜனின் நினைவு நாளான கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள அவரது நினைவு பலகையில் மலர் வைத்து மரியாதை செலுத்தியிருந்தார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதனிடையே மேஜர் முகுந்த் வரதராஜன் ரோலில் நடிப்பதற்காக, சிவகார்த்திகேயன் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீடியோவை கடந்த பிப்ரவரி 12 தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த பிப்ரவரி 16ஆம் இப்படத்தின் டீஸர் வெளியாகியது. இந்த இரண்டு வீடியோக்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இதையடுத்து சாய் பல்லவி பிறந்தநாளான கடந்த மே 9ஆம் தேதி அவருக்கு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்தது. அதன் பிறகு இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ‘அமரன்’ படத்திற்கான தனது டப்பிங் பணிகளைத் தொடங்கிருப்பதாக புகைப்படத்துடன் அப்டேட் கொடுத்துள்ளார்.

actor sivakarthikeyan sai pallavi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe