Advertisment

தொடர் தொல்லை - அமரன் படத்தால் மன உளைச்சலில் மாணவன்

amaran movie cell phone number issue

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ப்ரொபோஸ் செய்து விட்டு தனது செல்ஃபோன் நம்பரை ஒரு துண்டு சீட்டில் எழுதி கசக்கி தூக்கி வீசுவார். அந்த நம்பரை பார்த்த பலரும், சாய் பல்லவி நம்பர் என நினைத்து அவருக்கு வாழ்த்து கூற போன் செய்துள்ளனர். ஆனால் அந்த நம்பர் சென்னையை சேர்ந்த வாகீசன் என்ற மாணவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

Advertisment

அவருக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு சமூக வலைதள பக்கத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தூக்கம் இல்லாமல் அந்த மாணவர் மனஉளைச்சளுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi actor sivakarthikeyan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe