/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DXwFTMnUQAE2AEk.jpg)
தமிழில் முன்னணி நடிகையாக வலம் அமலா பால் நடிப்பில் சமீபத்தில் பாலியல் சர்ச்சை ஏற்படுத்தியவரை போலீசில் பிடித்துக்கொடுத்து பலரின் பாராட்டை பெற்றார். அதன் பின் படங்களில் அதிகம் கவனம் செலுத்தாத அமலாபால் கைவசம் வைத்துள்ள ஒரே ஒரு படமான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' வரும் 29ஆம் தேதி வெளியாகும் நிலையில், தற்போது செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள 'அதோ அந்த பறவை' படத்தில் நடிக்கிறார். புதுமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கும் இந்த படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் டுவிட்டரில் வெளியிட்டார். அதில்..."அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால்" என்று பதிவிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)