style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகை அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில் அமலா பால் கிழிந்த ஆடையுடன் வன்முறைக்கு ஆளான பெண் தோற்றத்தில் இருப்பது ரசிகர்களுக்கு மெல்லிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் குறித்து இயக்குனர் ரத்ன குமார் பேசும்போது... "இப்படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை. பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம்" என்றார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் 'ஆடை' படம் பற்றி அமலா பால் பேசும்போது.... "ஆடை" படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. 'ஆடை' சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும் படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது. இதில் நான் ஏற்று நடிக்கும் காமினி என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களது ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும். இயக்குனர் ரத்னகுமரின் 'மேயாத மான்' படத்தை பாரத்த பிறகு அவர் மீதும் அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் ஆடையின் கதை சொன்ன போது அந்த கதையும் கதை சொன்ன விதமும் என்னை பெரிதும் கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்தது. அவ்வளவு உணர்ச்சிகரமான கதை " என்றார் அமலா பால். 'ஆடை' படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடை பெற்று வருகிறது. விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">