Advertisment

'என் பெயரை மாற்றியதற்கான காரணம் இதுதான்...அமலாபால் அதை செல்லமாக அழைப்பார்' - விஷ்ணு விஷால்

vishnu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடித்துள்ள 'ராட்சசன்' படம் நாளை வெளியாகவுள்ளது. 'முண்டாசுப்பட்டி' பட இயக்குனர் ராம்குமார் இயக்கியுள்ள இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ளது. முனீஸ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட், சுசானே ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால் நடிகை அமலாபால் குறித்து பேசியபோது... "என் உண்மையான பெயர் விஷால். நான் சினிமாவில் அறிமுகம் ஆனபோது ஏற்கனவே நடிகர் விஷால் இருந்ததால் என் பெயரை விஷ்ணு என மாற்றினேன். அதன் பிறகு என் பெயரை ரொம்ப மிஸ் செய்தேன். விஷால் என் நண்பர் என்பதால் அவர் அனுமதியோடு என் பெயரை விஷ்ணு விஷால் என மீண்டும் மாற்றினேன். இதனால் என் பெயரை சுருக்கி வி.வி என அழைக்கின்றனர். நடிகை அமலாபால் கூட என்னை வி.வி என்று தான் செல்லமாக அழைப்பார்" என்றார்.

vishnu vishal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe