Advertisment

புதிய அவதாரம் எடுத்த அமலாபால் !

amala paul starting new production company

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அமலா பால் சமீபகாலமாககதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத்தேர்வு செய்து நடித்துவருகிறார். திரைத்துறையில் தன்னுடையநடிப்புத்திறமையால் பாராட்டுகளையும்விருதுகளையும் வாங்கியஅமலா பால் தற்போது புதிய முயற்சியாக அமலா பால் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தைதொடங்கியுள்ளார். அமலா பால் நடிக்கும் அடுத்த படத்தை இந்தநிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Advertisment

இயக்குநர் அபிலாஷ் பிள்ளை இயக்கும் இப்படத்திற்கு 'கேடவர்'எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய்இசையமைக்கிறார். இத்தகவலைத்தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளஅமலா பால் அத்துடன் 'கேடவர்' படத்தின் போஸ்ட்டரையும்பகிர்ந்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்," நான் சினிமாத்துறையில் 12 ஆண்டுகள், 144 மாதங்கள், 4380 நாட்களாக இருந்து வருகிறேன். இந்த 12 ஆண்டுகள் என் வாழ்க்கைசெழுமையாக இருந்தது. நான் இப்போது அமலா பால் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். இந்த புதிய முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருங்கள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

Amala Paul
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe