amala paul starring Cadaver movie Trailer released

அமலா பால், சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு 'அமலா பால் புரொடக்ஷன்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக 'கடாவர்' படத்தை தயாரித்து அதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனூப் எஸ் பணிக்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அதுல்யா ரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'கடாவர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை மோகன்லால் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். டாக்டர் ரத்னா தங்கவேலு என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் சர்ஜண்டாக வரும் அமலாபால் ஒரு கொலை வழக்கை கையில் எடுக்கிறார். பின்பு அந்தக் கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் வெளியாகியுள்ளது இந்த ட்ரைலர். இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment