style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படத்தில் நடித்து வரும் நடிகை அமலாபால் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில், சமீபத்தில் வேட்டி அணிந்தபடி இருந்த அமலாபாலின் புகைப்படம் ஒன்று வைரலானது. இந்நிலையில் அமலா தற்போது புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..."புகைப்பிடிப்பதை நான் ஊக்குவிக்கவில்லை, ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவாக இந்த புகைப்படத்தை எடுத்துள்ளேன். ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிப்பது போன்ற பிரபல காட்சி ஒன்று இருக்கும். அந்த வகையில் இது எனக்கான காட்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியும், கண்டனம் தெரிவித்து வருவதும் தற்போது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.