திருமண விவாகாரத்திற்குப் பிறகும் ஆக்டிவாக நடித்துக்கொண்டிருந்த நடிகை அமலாபால் சமீபத்தில் இந்தி பாடகர் பவ்னிந்தர் சிங்கைத் திருமணம் செய்து கொண்டார்.இந்தத் திருமணப் புகைப்படங்களை பவ்னிந்தர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சிறிது நேரத்தில் நீக்கி விட்டார்.இந்த திருமணம் குறித்து இதுவரை வாய் திறக்காத நடிகை அமலாபால் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பாதிப்பு குறித்து பேசியுள்ளார். அதில்...

Advertisment

ggkgh

''கரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்குச் சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.இந்த இக்கட்டான நேரத்தில் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவியாக இருங்கள்.பால்காரர், வாட்ச் மேன், டிரைவர்களுக்கு உதவி செய்யுங்கள்.பணியாளர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று விசாரியுங்கள்.எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதைச் செய்யுங்கள். இதன் மூலம் உலகில் மாற்றம் வரும்'' என்றார்.

Advertisment