இந்த மாத தொடக்கத்திலேயே விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் படம் உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு நிறுவனத்தின் நிதி பிரச்சனையால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

Advertisment

mega akash

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து லாபம் என்றொரு படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி அதை தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதனின் துணை இயக்குநர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பூஜை சில நாட்களுக்கு முன்பு போடப்பட்டு படபிடிப்பு தொடங்கியது. விஜய் செதுபதி இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது திடீரென அந்தப்படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் தேதிகள் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக நடிகை மேகா ஆகாஷ் அந்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.